தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' - உயர் கல்வித்துறை - சென்னை அண்மைச் செய்திகள்

விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நபர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு.

By

Published : Jun 13, 2021, 1:29 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று தகுதியான நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான அப்துல்கலாம் விருதுக்கான அறிவிப்பை தமிழ்நாடு உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில், 'டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருதானது, தமிழ்நாடு முதலமைச்சரால் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும். இந்த விருது விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு.

விருது பெறுவோருக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும், 8 கிராம் தங்கப் பதக்கமும் வழங்கப்படும்.

இந்த விருதுக்கான விண்ணப்பத்தினை வரும் ஜுலை 15க்குள், awards.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விருதுக்கு விண்ணப்பிப்போர் தன் குறிப்பு, உரிய விவரங்கள், அதற்குரிய ஆவணங்களுடன் அரசு முதன்மைச் செயலாளர், உயர் கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 205 கோடி ரூபாய்க்கு நிறைவடைந்த விண்வெளிப் பயண ஏலம்!

ABOUT THE AUTHOR

...view details