தமிழ்நாடு

tamil nadu

ஜூலை மாதத்தில் 71 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

By

Published : Jun 28, 2021, 7:33 PM IST

தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதத்தில் 71 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் ரூ.82.50 லட்சம் செலவில் டயாலிசிஸ் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஜூன்.28) தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவொற்றியூர் மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.82.50 லட்சம் செலவில் டயாலிசிஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது. ஒரு முறை டயாலிசிஸ் செய்ய மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் நிலையில், நடுத்தர மற்றும் எழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் டயாலிசிஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது.

ரோட்டரி, அரிமா சங்கம் இணைந்து பல்வேறு உதவிகளை சென்னை மாநகராட்சிக்கு செய்து வருகின்றன. கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி நடைபெறும் நிலையில், பல இடங்களில் தடுப்பூசி இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. ஆனால் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதுவரை 1 கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது 2 லட்சத்து 7ஆயிரத்து 305 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இன்று(ஜூன்.28) மாலை இரண்டு லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. மேலும் ஜூலை மாதத்தில் 71 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன.

மழைக்காலங்களில் நீர் தேக்கம் இருக்கக்கூடாது என்பதற்காக சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் மூன்றாம் அலை வந்தாலும் அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது. மூன்றாம் அலை குறித்து மக்கள் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. அதேசமயம் என்றுமே மாணவர்களை காக்கும் அமைப்பாகவும், மாணவர்களுக்கான அமைப்பாகவும் திமுக இருந்து வருகிறது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி

ABOUT THE AUTHOR

...view details