காலிப்பணியிடங்கள்:
கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் - 731
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 தேதியின் படி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.V.Sc & A.H தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எஸ்எஸ்எல்சி தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தமிழை ஒரு மொழியாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவராகப் பதிவு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Computer Based Test தேர்வானது 15.03.2023 அன்று நடைபெற உள்ளது.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.56,100 – 2,05,700 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு கட்டணம்:
விண்ணப்பதார்கள் பதுவுக்கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டண விலக்கு குறித்து அறிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/Document/english/34_2022_VAS%20ENG.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் மூலம் 17.12.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க:கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6990 காலிப்பணியிடங்கள்