தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு வழக்கில் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல் - tamil news

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றம் முன்பு எடுத்து வைக்க அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டு வழக்கில் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும்
ஜல்லிக்கட்டு வழக்கில் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும்

By

Published : Nov 25, 2022, 10:33 PM IST

சென்னை:தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை விதிக்க கோரி 'பீட்டா' என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மத்திய அரசு காளைகளை விலங்குகள் காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது.

இதனை மையமாக வைத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மத்திய அரசு 2014-ம் ஆண்டு கொண்டுவந்த தடையை உறுதிப்படுத்த வேண்டுமென கூறப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

இது 'மெரினா புரட்சி' என அப்போது கூறப்பட்டது. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தில் பல அமைப்புகள் கலந்து கொண்டனர். இதன் விளைவாக அப்போதைய முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ்நாட்டில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாட்டின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைந்துள்ளது. ஜல்லிகட்டிற்கு தடை வந்த போது அவசர சட்டம் கொண்டு வந்து தடையை நீக்கியது அதிமுக அரசு. திமுக அங்கம் வகித்த மத்திய அரசு 2011-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்தது. ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த ஏதுவாக ஜனவரி7, 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஓர் அறிவிக்கையினை வெளியிட்டது.

இந்த அறிவிக்கையினையும் உச்ச நீதிமன்றம் 12-01-2016 அன்று தடை செய்து தீர்ப்பளித்தது. திமுக அரசு அங்கம் வகித்த மத்திய அரசின் ஜல்லிக்கட்டுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக, தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக, மிகப் பெரிய அளவில் போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றதையடுத்து, சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்கப்பட்டது.

மேற்படி சட்டத்தை எதிர்த்து, பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ’ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் இயற்றிய தமிழ்நாடு சட்டசபையின் அதிகாரம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்த உள்ளோம்’, என்று தெரிவித்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முதலமைச்சர் இதில் உடனடியாக தனி கவனம் செலுத்தி, 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டத்தை நிலைநிறுத்தும் வகையில், தலை சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றம் முன்பு எடுத்து வைக்க வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ரூ.500 பல்புக்கு ரூ.5000 கொடுத்த இபிஎஸ் - அமைச்சர் பெரியகருப்பன் விளாசல்!

ABOUT THE AUTHOR

...view details