தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை பாதிப்பு - கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தல் - வெள்ள பாதிப்புகள்

மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4,626 கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

tamil nadu govt request union govt  additional funds  dditional funds to repair the damage caused by floods  damage caused by floods  flood  flood affected area  ஒன்றிய அரசு  தமிழ்நாடு அரசு  தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தல்  நிதி ஒதுக்கீடு  மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு  வெள்ள பாதிப்புகள்  கனமழை பாதிப்புகள்
கனமழை பாதிப்புகள்

By

Published : Nov 24, 2021, 9:31 PM IST

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை தற்காலிகமாக சீரமைக்க முதற்கட்டமாக ரூ.549.63 கோடி, நிரந்தரமாக சீரமைக்க ரூ.2079.89 கோடி என மொத்தம் ரூ.2629.29 கோடி பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யகோரி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் கணக்கெடுக்கப்பட்ட கூடுதல் சேத விவரங்களின் படி, தற்காலிக சீரமைப்பு பணிக்காக ரூ.521.28 கோடியும், நிரந்தரமாக சீரமைப்பு பணிக்காக ரூ.1475.22 கோடி என மொத்தம் ரூ.1996.50 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய அரசிற்கு சமர்பிக்கப்பட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் கோரப்பட்டுள்ள தொகை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1070.92 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிக்காக ரூ.3554.88 கோடி என மொத்தம் ரூ.4625.80 கோடி கூடுதலாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாற்று நட்டு போராட்டம் - சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details