2024ஆம் ஆண்டு பொது விடுமுறை பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு.. எத்தனை நாட்கள் லீவு தெரியுமா? - 2024 govt holidays
Tamil Nadu Public Holidays in 2024: ஒவ்வொரு ஆண்டு தொடங்குவதற்கு முன்பு அந்த ஆண்டிற்கான விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசு அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: ஒவ்வொரு ஆண்டு தொடங்குவதற்கு முன்பே, அந்த ஆண்டில் வரும் அனைத்து அரசு விடுமுறைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாநில அரசு சார்பில் சார்பில் வெளியிடப்படுவது வழக்கம். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விடுமுறைகளின் அடிப்படையிலே கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள், அரசு சார்ந்த அனைத்து நிர்வாகங்கள் செயல்படும்.
2023 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியல் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போது, 2023 ஆம் ஆண்டிற்கான விடுமுறைகள் அனைத்தும் பெரும்பாலும் வார இறுதி நாட்களில் வந்ததால் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் நிலவியது. இதனை மீம்ஸ்களாக தங்களது சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வந்ததை நாம் பார்க்க முடிந்தது.
அதே போல வரும் 2024ஆம் ஆண்டிலும் இருந்துவிடுமோ என்ற அச்சம் பலர் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் அடங்கிய பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு இந்தாண்டு தீபாவளிக்கு அரசு தரப்பில் இருந்து வரும் விழாப் பரிசாகவும் மாறியுள்ளது.
வ.எண்
பொது விடுமுறை
தேதி
கிழமை
1
ஆங்கிலப் புத்தாண்டு
01.01.2024
திங்கட்கிழமை
2
பொங்கல்
15.01.2024
திங்கட்கிழமை
3
திருவள்ளுவர் தினம்
16.01.2024
செவ்வாய்கிழமை
4
உழவர் தினம்
17.01.2024
புதன்கிழமை
5
தைப்பூசம்
25.01.2024
வியாழக்கிழமை
6
குடியரசு தினம்
26.01.2024
வெள்ளிக்கிழமை
7
புனித வெள்ளி
29.03.2024
வெள்ளிக்கிழமை
8
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
(வணிக/கூட்டுறவு வங்கிகள்)
01.04.2024
திங்கட்கிழமை
9
தெலுங்கு வருடப் பிறப்பு
09.04.2024
செவ்வாய்க்கிழமை
10
ரம்ஜான்
11.04.2024
வியாழக்கிழமை
11
தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினம்
14.04.2024
ஞாயிற்றுக்கிழமை
12
மகாவீரர் ஜெயந்தி
21.04.2024
ஞாயிற்றுக்கிழமை
13
மே தினம்
01.05.2024
புதன்கிழமை
14
பக்ரீத்
17.06.2024
திங்கட்கிழமை
15
மொகரம்
17.07.2024
புதன்கிழமை
16
சுதந்திர தினம்
15.08.2024
வியாழக்கிழமை
17
கிருஷ்ண ஜெயந்தி
26.08.2024
திங்கட்கிழமை
18
விநாயகர் சதுர்த்தி
07.09.2024
சனிக்கிழமை
19
மிலாதுன் நபி
16.09.2024
திங்கட்கிழமை
20
காந்தி ஜெயந்தி
02.10.2024
புதன்கிழமை
21
ஆயுதபூஜை
11.10.2024
வெள்ளிக்கிழமை
22
விஜயதசமி
12.10.2024
சனிக்கிழமை
23
தீபாவளி
31.10.2024
வியாழக்கிழமை
24
கிறிஸ்துமஸ்
25.12.2024
புதன்கிழமை
காரணம், அரசு அறிவித்துள்ள விடுமுறை பட்டியலில் பெரும்பாலான விடுமுறை என்பது வார நாட்களிலே வருகிறது. இது பள்ளி மாணவர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தாண்டின் முதல் பண்டிகையான புத்தாண்டு திங்கட்கிழமை, பொங்கல் பண்டிகையும் திங்கட்கிழமை தான் தொடங்குகிறது. குடியரசுத் தினம் வெள்ளிக்கிழமை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் என முக்கிய நாட்கள் வார நாட்களிலிலேயே வருகிறது.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த 24 நாட்களில் 2 சனி மற்றும் 2 ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 4 நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்களில் வருகின்றன. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டிலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ அரசின் இந்த விடுமுறை பட்டியல் என்பது "குமுதா ஹேப்பி அண்ணாச்சி" என்று சொல்வது போல், பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஒரு மன மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என தற்போதே பலரும் இணையத்தில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.