சென்னை:தமிழ்நாட்டில் இருந்து செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆய்வு மையம்(ISRO) ஏவுதளம் கட்டமைக்க நிலம் கையகபடுத்தவதற்கான கால அவகாசத்தை ஓராண்டிற்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசானை வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ(ISRO) ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பல்வேறு ராக்கெட்களை விண்ணிற்கு செலுத்தி சாதனை படைத்துள்ளது.
இந்தநிலையில், புவியியல் மற்றும் வானியியல் ரீதியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் அருகே உள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தின் ஏவுதள கிளையை அமைத்து அங்கிருந்து சிறியரக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு அதற்கான முதற்கட்ட பணிகளை கடந்தாண்டு தொடங்கியது.