நவ.19 பள்ளி, கல்லூரிகள் செயல்படும் - தமிழக அரசு - பள்ளி கல்லூரி வேலை நாள்
நவம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Etv Bharat
தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக அக்டோபர் 25-ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் சனிக்கிழமை (நவம்பர் 19) அன்று பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Last Updated : Nov 17, 2022, 5:57 PM IST