சென்னை:பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 9-ஆம் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இம்மாதம் 24 ஆம் தேதி துவங்கி, மாத இறுதிவரை ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. வெயில் காரணமாக தேர்வுகள் முன்கூட்டியே துவங்கப்பட்டது.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் இணைந்து வெளியிட்டிருந்த அறிவிப்பில், "1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21-ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். 4 ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடித்திருக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் பள்ளி கடைசி வேலை நாள் ஏப்ரல் 28-ஆம் தேதி" என அறிவித்திருந்தனர்.
ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையில் நிரந்தர ஆசிரியர்கள் பணியில் இல்லாமல், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளி இறுதி வேலை நாள் வரை பணிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர். வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் பொழுது அது குறித்து பரிசீலித்து மாணவர்களின் நன்மை கருதி முன்கூட்டியே தேர்வு நடத்தி விடுமுறை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்திருந்தார்.