தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தனர். மேலும், தமிழக அரசு கொண்டுவந்த 20-க்கும் மேற்ப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் உள்ளார் எனவும் திமுக குற்றம்சாட்டி வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்! - Chennai News
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.
ஆர்.என்.ரவி(கோப்புப்படம்)
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கும் அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு மிரட்டிய 'கரூர் குரூப்'