சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(ஆக.21) திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆளுநருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் - ஆளுநர் ஆர்என் ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
RN Ravi
ஆளுநர் தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், டெல்லியில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. பிரதமா் மற்றும் உள்துறை அமைச்சரையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆளுநர் இந்த வார இறுதியில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.