சென்னை:ஆசிரியர்கள், கல்வியாளர்களுடன் சென்னை ராஜ் பவன் பாரதியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது தேசிய மற்றும் மாநில அளவிலான நல்லாசிரியர் விருதுகளைப் பெற்ற ஆசிரியர்களையும் கல்வியாளர்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். பின்பு தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இணையற்ற பங்களிப்புகளை வழங்கும் ஆசிரியர்கள் குறித்து பேசினார்.
மேடையில் ஆளூநர் பேசியதாவது, "ஒரு இளம் மனதின் ஆளுமையை வடிவமைப்பதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மாணவர்களின் கனவுகளை ஊக்குவிக்கவும் உந்து சக்தியாகவும் விளங்கும் ஆசிரியர்களே, பொறுப்புள்ள நபராகவும் மாணவர்களை மாற்றக்கூடியவர்கள். ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான சிறப்புப் பிணைப்பு என்பது, தேசத்தில் நிலவி வந்த குரு வழி பாரம்பரியம் மற்றும் மரபு கல்வி முறையில் அமைந்தது. அதில், ஒரு ஆசிரியர் மாணவனை பாட புத்தகங்கங்களுக்கு அப்பால் ஒரு லட்சிய கனவு காண்பவராகவும், ஆற்றல்மிக்க மனிதராகவும் மாற்றுபவராகவும் விளங்கினார். இந்தப் பண்பாடு நமது அடையாளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
ஆனால் தற்போது அந்த உறவு தற்போது பரிவர்த்தனை மிக்கதாக மாறியுள்ளது. இன்று கற்பித்தல் ஒரு வேலையாக கருதப்படுகிறது.மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது, அவர்களின் நல்லதுக்குத்தான் என்ற நிலை முன்பு இருந்தது. ஆசிரியர்களை, பெற்றோர் முழுமையாக நம்பினர். உடல் ரிதீயிலான தண்டனைகளை மாணவர்களுக்கு அளித்தனர். அது, மாணவர்களின் நல்லதுக்கே என, நான் படிக்கும் காலத்தில் கருதினர். இப்போது அப்படி ஒரு சூழல் இல்லலை. மாணவர்களை அடிப்பதற்கு தற்போது தடை இருக்கிறது. சட்டமே, கார்ப்பரல் பனீஷ்மென்ட் கூடாது என கூறுகிறது. நம் நாட்டில் ஒவ்வோர் குழந்தையையும் தேசத்தின் சொத்து. நாம் தேசத்தின் வெற்றி என்பது மாணவர்கள் அடையும் வெற்றியில் தான் அடங்கியுள்ளது.
நமது நாடு மாற்றத்தின் உச்சியில் இருப்பதால், 2047க்குள் விஸ்வரூப வளர்ச்சி அடையும் .இதற்கான கட்டமைப்புப் பணியில் ஆசிரியர்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். நமது இளம் குழந்தைகளில், குறிப்பாக மாணவர்களின் ஆளுமைகள், அவர்களின் திறனையும் அவர்களைச் சுற்றியுள்ள வாய்ப்புகளையும் ஆசிரியர்கள் உணரச் செய்ய வேண்டும். சமூகத்தில் பெண்கள் பங்கேற்பின் முக்கியத்துவம் பற்றி மகாகவி பாரதியார் பாடிய “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற வரிகளை ஆளுநர் மேற்கோள் காட்டடு பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நமது பிரதமர் தேச வளர்ச்சியில் பெண்களின் பங்கை அடிக்கடி குறிப்பிடுவதோடு, ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்து வருவதையும் குறிப்பிட்டார்,மேலும் பெண்களுக்கான திறமையை வெளிக்கொணர, அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை ஆசிரியர்கள் மேம்படுத்தி,வழிகாட்ட வேண்டும்" என இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: ரூ.40 ஆயிரம் செலவிட்டும் லாபம் இல்லை... தலைகீழாக மாறிய தக்காளியின் விலை!