தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்! - ஆளுநர் ஆர்என் ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி

By

Published : Oct 30, 2022, 4:13 PM IST

சென்னை: முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு இன்று அவரது திருவுருவப் படத்திற்கு சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து இன்று காலை சென்னை விமானநிலையத்திலிருந்து ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். ஒரு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச்சென்றுள்ள ஆளுநர், இன்று இரவே மீண்டும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு வருகிறார்.

டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய அலுவலர்களைச் சந்தித்து கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்து சம்பந்தமாகவும், என்.ஐ.ஏ அலுவலர்கள் விசாரணையின் அறிக்கை குறித்தும் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:பெரிய பதவியை எதிர்பார்க்கிறார் ஆளுநர் ரவி... பதவி விலகி விட்டு கருத்து சொல்லட்டும்... மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி...

ABOUT THE AUTHOR

...view details