தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய  விளையாட்டு போட்டிகளில்  வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து - National Games 2022

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து
தேசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து

By

Published : Oct 2, 2022, 12:17 PM IST

Updated : Oct 2, 2022, 1:06 PM IST

சென்னை:குஜராத்தில் 7 ஆண்டுகளுக்குப் பின் நாட்டின் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள், வரும் அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து சுமார் 7,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டிகளில் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதுவரை 21 பதக்கங்களை வென்றுள்ளனர்.

அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ஆர் .என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தேசிய விளையாட்டுகள் 2022இல் பல்வேறு விளையாட்டுகளில் தங்கம் வென்ற பவானி தேவி, ஜெஸ்வின் ஆல்ட்ரின், பிரவீன் சித்ரவேல், அஜித், ரோஸி மீனா பால்ராஜ் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல்

Last Updated : Oct 2, 2022, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details