தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் - Krishna Jayanthi

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர்
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர்

By

Published : Aug 18, 2022, 11:34 AM IST

சென்னை: இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கிருஷ்ண ஜெயந்தியின் இந்த புனிதமான நேரத்தில், தமிழ்நாடு மக்களுக்கு எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கிருஷ்ணர், அவரது வாழ்க்கையின் மூலம் அன்பு, கருணை, நீதி மற்றும் பொறுப்புகளின் மதிப்பை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

உலக நன்மைக்காக, அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய நாட்டை ஒரு முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுகின்ற பணியில் நம் நாடு அடியெடுத்து வைத்திருக்கும் இந்த பொற்காலத்தில், அறவாழ்விற்கான ஒரு வழியாக முழுமையாகவும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் நமது கடமையை மேற்கொள்ள வேண்டும் என்கிற அவரது செய்தி, இன்று நம் அனைவருக்கும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி

இந்த நன்னாளில், உலகின் வழிகாட்டியாக பரிணமிக்கவுள்ள நம் நாட்டின் விழுமிய லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு, நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு, நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Viral Audio... கிருஷ்ண ஜெயந்திக்கு குழந்தைகளை வேடமணிந்து வரக்கூறிய ஆசிரியர்கள்.. வலுக்கும் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details