சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15ஆவது கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் டெல்லியிலிருந்து ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் ஆர். சுப்ரமணியன், கேரளா மாநில நீர்வளத் துறைக் கூடுதல் தலைமைச் செயலர் டி.கே. ஜோஸ்,
கர்நாடக மாநில நீர்வளத் துறைக் கூடுதல் தலைமைச் செயலர் ராகேஷ் சிங், புதுச்சேரி மாநில ஆணையாளர் மற்றும் செயலாளர் எ. விக்ராந்த் ராஜா, தமிழ்நாடு காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பட்டாபிராமன், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. காவிரி ஆற்றிலிருந்து வரும் பாசனத்திற்கான நீர் இந்த ஆண்டிற்கு உச்ச நீதிமன்ற ஆணையின்படி மாதம் வாரியாக நீரை பிலிகுண்டுலுவிலிருந்து கர்நாடகம் வழங்கிட வலியுறுத்தப்பட்டது.