சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,ரஷ்ய ராணுவம் இன்று (பிப் 24) அதிகாலை உக்ரைன் நாட்டுக்குள் ராணுவ நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளதாக ஊடகச் செய்திகளின் வாயிலாக அறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 5ஆயிரம் மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி படிப்போர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக பல மீட்பு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதனை ஒருங்கிணைக்கும் பொருட்டு ஜெசிந்தா லாசரஸ் மாநிலத் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்பு அலுவலரகம் நியமனம்
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களையும், டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர், உள்ளுறை ஆணையரத் தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.