தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசு 6 காவல் துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு

சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு ஐஜி நியமனம் உள்ளிட்ட 6 காவல் துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு 6 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு
தமிழ்நாடு அரசு 6 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு

By

Published : Oct 6, 2022, 8:58 PM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 5 ஐ.பி.எஸ் அலுவலர்கள் உட்பட 6 காவல்துறை அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முக்கிய வழக்காகப் பார்க்கப்படும் கோடநாடு கொள்ளை, கொலை வழக்கினை சமீபத்தில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ள நிலையில், காலியாக இருந்த சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு ஐஜி பொறுப்பிற்கு ஐ.பி.எஸ் தேன்மொழியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல ஆயுதப்படை ஐஜியாக இருந்த கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாகவும், பரங்கிமலை துணை ஆணையராக இருந்த பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் தீபக் சிவாஜ் ஐ.பி.எஸ் பரங்கிமலை துணை ஆணையராகவும், சமய் சிங் மீனா ஐ.பி.எஸ் போக்குவரத்து கிழக்கு மண்டல துணை ஆணையராகவும், அந்தப் பதவியில் இருந்த குமார் தமிழ்நாடு சிறப்பு காவல்படை எஸ்.பியாகவும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ABOUT THE AUTHOR

...view details