தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை அமைச்சரவையில் பொருண்மையாக வைத்து  நடவடிக்கை எடுக்க உத்தரவு - தமிழ்நாடு அரசு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு பொருண்மையாக வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tamil
Tamil

By

Published : Aug 27, 2022, 4:49 PM IST

சென்னை:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, கடந்த 2017ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் கால வரம்பு கடந்த 24ஆம் தேதி முடிவுற்றது. இந்த நிலையில், இன்று (ஆக.27) ஆறுமுகசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை ஆணைய அறிக்கையை வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த அவர், இந்த அறிக்கையை வழங்கினார். அப்போது, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர். இந்த அறிக்கையை வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு பொருண்மையாக வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்... ஸ்ரீமதியின் தாயார் செல்வி...

ABOUT THE AUTHOR

...view details