சென்னை:திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன் மற்றும் கோபிநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “தினமும் இரவு 10 மணிக்கு மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
இவ்வாறு மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பொது இடங்களிலும், கால்வாய்களிலும் வீசிச் செல்கின்றனர். இவை தவிர சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்திவிட்டுச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தனியாக செல்பவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கிறது.
கடந்த 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை திறந்து வைக்கலாம் என அனுமதிக்கப்பட்டது. இதனால் மதுபானம் வாங்குபவர்கள் அதை அருந்துவதற்கு பார்கள் இயங்கும் நேரங்களை மாற்றம் செய்தால்,