சென்னை:ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு தெற்கு இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை சிவில் சப்ளை சிஐடி பிரிவீன் எஸ்.பி ஆக சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி கல்பனா நாயக் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைத்துறை ஏடிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐஜியாக தமிழ் சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர துணை ஆணையராக பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ஆக பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகரப் போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஆக சமய் சிங் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐஜி ஆக தமிழ்ச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஐஜியாக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்” இவ்வாறு உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடன் தவணை செலுத்துவதை தளர்த்த கோரிக்கை.. நிதியமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!