தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு! - ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

By

Published : Apr 23, 2021, 4:30 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து, அங்கு ஆக்ஸிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது.

அந்த மனு நேற்று (ஏப்.22) விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இது தொடர்பாக, பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வழக்கு இன்றைக்கு (ஏப்.23) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று(ஏப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் ஆக்ஸிஜன் தயாரிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது.

தற்போது 1 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கூட மிகவும் முக்கியம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலை கருத்துக்கேட்பு கூட்டம்: ஆதரவாளரை சுற்றிவளைத்த எதிர்ப்பாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details