தமிழ்நாடு உள்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகா், தமிழ்நாடு முதலமைச்சரின் செயலர் பி.செந்தில்குமாா், தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் ஜே.கே. திரிபாதி ஆகியோா் இன்று மாலை 5 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
தமிழ்நாடு அரசின் உயா் அலுவலர்கள் டெல்லி பயணம் - காவல் துறை இயக்குநர் ஜே.கே. திரிபாதி
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்க தலைமைச் செயலர், டிஜிபி இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.
official
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு தலைமை செயலர் சண்முகம் இன்று இரவு 7 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் டெல்லி புறப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையம் வந்த தலைமைச் செயலர் சண்முகம், டெல்லியில் நடைபெறும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் கூட்டத்திற்காக செல்கிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.