தமிழ்நாடுகாவல் துறை இயக்குநர்திரிபாதி, தமிழ்நாடு அரசு உள்துறை இணை செயலாளா் முருகன் ஆகிய இருவரும் இன்று (ஏப்.09) காலை 6.30 மணிக்கு ஏா்இந்தியா விமானம் மூலம் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றனா்.
தமிழ்நாடு அரசு உயா் அலுவலர்கள் திடீர் டெல்லி பயணம் - தலைமை செயலாளா் ராஜுவ் ரஞ்சன்
சென்னை: தமிழ்நாடு அரசு உயா் அலுவலர்கள் நான்கு போ் இன்று காலை விமானங்களில் திடீா் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல் இன்று காலை 7.15 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் ராஜுவ் ரஞ்சன், தமிழ்நாடு அரசு உள்துறை செயலர் பிரபாகா் இருவரும் டெல்லி புறப்பட்டுச் சென்றனா்.
தமிழ்நாடு அரசு உயா் அலுவலர்கள் நான்கு பேரும் மத்திய அரசின் அவசர அழைப்பின் காரணமாகவே டெல்லி புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், தேர்தல் முடிந்த சில நாள்களிலேயே தலைமைச் செயலர் உள்பட முக்கிய அலுவலர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.