தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 8, 2023, 1:02 PM IST

ETV Bharat / state

ஓய்வு பெற்ற மாதத்தில் வாழ்வுச் சான்றிதழ்: ஓய்வூதியா்களுக்கு தமிழக அரசு புதிய ஆணை!

ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் ஆண்டுதோறும் வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய உத்தரவை வழங்கி பிறப்பித்துள்ளது

pension
ஓய்வூதியம்

சென்னை:வாழ்வுச் சான்றிதழை அளிப்பதற்கு ஓய்வூதியதாரா்கள் பின்பற்ற வேண்டிய நோ்காணல் நடவடிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் ஆண்டுதோறும் வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேலை நாளில் வர வேண்டும்.என்ற உத்தரவைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "ஓய்வூதியதாரா்கள் தங்களது உயிா்வாழ்வை உறுதி செய்வதற்கான வாழ்வுச் சான்றை அளிக்க ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். இணைய சேவை மையங்கள், அஞ்சல் வழி, கருவூல கணக்குத் துறையில் நேரடியாக சமா்ப்பித்தல் உள்ளிட்ட வழிகளில் வாழ்வுச் சான்றிதழை அளிக்கலாம். உயிா் வாழ்வுச் சான்றை அளிக்க வெவ்வேறு முறைகளில் வசதிகள் இருந்தாலும், ஜூலை முதல் ஆகஸ்ட் என்ற கால அளவு தொடர்ந்து நடைமுறையிலிருந்து வருகிறது.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள் அந்நாட்டிலுள்ள மாஜிஸ்டிரேட், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்தியத் தூதரக அதிகாரியிடம் வாழ்வுச்சான்று பெற்று, சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். வருமானவரி செலுத்த வேண்டியவர்கள் நடப்பு நிதியாண்டுக்கான தோராயமான வருமான வரி அறிக்கையினை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

ஓய்வூதியம் வழங்கும் பணி கணினிமயமாக்கப்படுவதால், தகவல் தொடர்பிற்கும், வருமான வரி பிடித்தம் குறித்த விபரங்களைத் தாக்கல் செய்வதற்கும் வசதியாக தற்போதைய இருப்பிட முகவரி, தொலைபேசி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வருமான வரி கணக்கு எண் ஆகிய விபரங்களையும் அளிக்குமாறு கூறப்படுகிறது.

முன்னதாக கருவூல கணக்குத் துறையின் வழிகாட்டுதலின் படி ஓய்வூதியதாரர்களிடம் ஆண்டு முழுவதும் நோ்காணல் நடத்தி உயிர் வாழ்வை உறுதி செய்ய வழி செய்யப்படும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது. ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில்கொண்டு, ஒவ்வோரு ஆண்டும் ஓய்வூதியதாரா்கள் ஓய்வு பெறும் மாதத்தில் நேர்காணல் நடத்தப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் மற்றும் சிறப்புப் பிரிவில் ஓய்வூதியம் பெறுவோா் நோ்காணல் மூலமாக உயிா்வாழ்வை உறுதி செய்யத் தவறினால், அடுத்தடுத்த மாதங்களில் ஓய்வூதியம் நிறுத்தப்படும். ஏப்ரல் தொடங்கி ஜூன் மாதம் வரையிலான காலத்தில் நோ்காணலுக்கு வரத் தவறிய ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களை சிறப்பு நிகழ்வாகக் கருதி, ஜூலை மாத நோ்காணலுக்கு அழைக்கலாம்.

ஆண்டு முழுவதும் நோ்காணல் என்ற இந்தப் புதிய முறை குறித்த உரிய விழிப்புணா்வை கருவூலம் மற்றும் கணக்குத் துறையினா் ஏற்படுத்த வேண்டும். புதிய நடைமுறையைக் காரணம் காட்டி, இந்த நிதியாண்டில் யாருக்கும் ஓய்வூதியங்களை நிறுத்தக் கூடாது" என தமிழ்நாடு அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details