தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' - எஸ்.டி.பி.ஐ! - தமிழ்நாடு அரசு

சென்னை: கரோனா காலத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள நீட், ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

tamil-nadu-government-must-pass-resolution-to-cancel-neet-exam
tamil-nadu-government-must-pass-resolution-to-cancel-neet-exam

By

Published : Sep 4, 2020, 5:07 PM IST

சென்னை மண்ணடியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 4) அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்தக் கூட்டத்தின் போது பேசிய முபாரக், கரோனா காலத்திலும் மத்திய அரசு நீட், ஜெஇஇ தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதை கண்டிக்கிறோம். நீட், ஜெஇஇ தேர்வுகளை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பாஜக தலைவர்களான எச்.ராஜா, வானதி சீனிவாசன் போன்றோர் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமநாதபுரத்தை கலவரமில்லாத பூமியாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா காலத்தில் பொருளாதார பிரச்னை இருக்கும் நேரத்தில் சுங்கச் சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

தனியார் நிறுவன கல்விக் கட்டணங்களை அரசு ஏற்று மக்கள் இன்னலை போக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தின் போது எஸ்டிபிஐ கட்சியின், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சாலிகிராமத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details