கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கான புதிய விதிமுறைகளை குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி கருணை அடிப்படையில் வேலை பெற குறைந்தபட்சமாக 18 வயதையும்; அதிகப்பட்சமாக 50 வயதையும் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக 53 வயதுக்குள் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள், பணியின்போது இறக்கும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு புதிய நடைமுறையை வகுத்து இந்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு மறைந்த அரசு ஊழியர்களின் இறப்பு நிகழ்ந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்திட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருணை அடிப்படையிலான பணிகள் c மற்றும் d பிரிவில் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வேலை பெறுவதற்கு மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம், இரண்டு லட்ச ரூபாய்க்குக் கீழ் இருக்க வேண்டும் என்ற உத்தரவும் புதிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் வேலை - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு