தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொன்னபடி வணிகர்களுக்கு குடும்ப நல நிதி உதவி உயர்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்! - 3 லட்சம் வணிகர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கும் குடும்ப நல நிதி உதவி ரூ.1.00,000இல் இருந்து ரூ.3,00.000-ஆக உயர்த்தி வழங்கும் ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சொன்னபடி வணிகர்களுக்கு குடும்ப நல நிதி உதவி உயர்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்...
சொன்னபடி வணிகர்களுக்கு குடும்ப நல நிதி உதவி உயர்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்...

By

Published : Jun 7, 2022, 10:31 AM IST

சென்னை: திருச்சியில் மே 5ஆம் தேதி நடைபெற்ற 39ஆவது தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பத்திற்கு குடும்பநல உதவித் தொகை ரூ.1,00,000 லிருந்து இனிவரும் காலங்களில் ரூ.3.00.000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனையடுத்து, வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராகப் பதிவு பெற்றுள்ள வணிகர்களுக்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உள்பட்டு குடும்ப நல உதவித் தொகை உயர்த்தி வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராகப் பதிவு பெற்று குறைந்தது ஓர் ஆண்டாவது உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

வணிகர்களுக்கு குடும்ப நல நிதி உதவி உயர்த்திய தமிழ்நாடு அரசு

உறுப்பினர் மதிப்பு கூட்டு வரி அல்லது சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் பதிவு பெற்றிருப்பின் முறையாக மாதாந்திர தொகை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். உறுப்பினர் எவரும் வேறு எந்த நல வாரியத்திலும் பதிவு பெற்று நல உதவித் திட்டம் எதுவும் பெற்றிருத்தல் கூடாது. உறுப்பினரின் மரணம் தற்கொலையாக இருத்தல் கூடாது போன்ற நிபந்தனைகளை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: "வணிகர் நலனில் அக்கறை கொண்டது திமுக அரசு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details