தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு... முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! - chennai news

DA increase for Tamil Nadu Goverment Staffs : அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படியில் இருந்து 4 சதவீதம் உயர்த்தி 46 சதவீதமாக வழங்கப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

tamil-nadu-government-increase-da-for-goverment-staffs
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு...தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 2:14 PM IST

Updated : Oct 25, 2023, 2:19 PM IST

சென்னை:தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீதம் அகவிலைப்படி 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது, "மக்கள் நலனுக்காக வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.

முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து வருகிறார்.

மத்திய அரசு, பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2 ஆயிரத்து 546 கோடியே 16 லட்ச ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணபிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?

Last Updated : Oct 25, 2023, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details