தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2021, 11:09 AM IST

Updated : Dec 16, 2021, 12:10 PM IST

ETV Bharat / state

ஜனவரி முதல் பள்ளி, கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து

தமிழ்நாட்டில் தற்போது சுழற்றி முறையில் வகுப்புகள் நடைபெற்றுவரும் நிலையில் ஜனவரி 3ஆம் தேதிமுதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சுழற்சி முறை ரத்து!
சுழற்சி முறை ரத்து!

சென்னை: கரோனா தொற்று குறையத் தொடங்கியதால், செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன. அதையடுத்து சுழற்றி முறையில் பள்ளிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதிமுதல் பள்ளி, கல்லூரி வகுப்புகள் சுழற்சி முறையின்றி, நேரடி வகுப்புகள் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இது குறித்து அரசு வெளியிட்ட அரசாணையில், ”தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாகப் பள்ளிகளுக்குச் செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், 2022 ஜனவரி 3 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களில் சுழற்சி முறையின்றி இயல்பாகச் செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பள்ளி மாணவி உடல் கருகிய நிலையில் மீட்பு!

Last Updated : Dec 16, 2021, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details