தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் இரு மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு! - Government of TamilNadu

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரு மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு!
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரு மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு!

By

Published : Aug 6, 2022, 11:46 AM IST

சென்னை: விளையாட்டு வீரர்கள் இளமைக் காலத்தில் வெற்றிகளை குவிக்கின்றனர். அவர்களின் வலிமையும் ஆற்றலும் பொருந்திய காலம் நிறைவான பிறகு, சாதனைகளை அங்கீகரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

அவ்வாறு நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகையான ரூ.3000, தற்போது ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.2,057 கோடி ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details