தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதா ? - கிடுக்குப்பிடி போடும் தேர்வாணையம் - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சென்னை: குரூப் 4 தேர்வில் முதலில் 100 இடங்களுக்குள் பிடித்த ராமநாதபுரம், கீழக்கரை மையத்தில் தேர்வு எழுதிய 40 பேரிடம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விசாரணை செய்யத் திட்டமிட்டுள்ளது.

tnpsc
tnpsc

By

Published : Jan 9, 2020, 11:38 PM IST

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 35 தேர்வர்களில் தரவரிசையில் முதல் 100 இடங்களில் வந்துள்ளனர்.

மேலும் தேர்வர்களில் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரத்தில் தேர்வு எழுதிய 2840 பேரில் 262 பேர் வெளி மாவட்டத்தினர் என்றும், 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர் என்றும், அவர்களில் 40 பேர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான பின், சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட 24 ஆயிரம் நபர்களின் தேர்வுத்தாள்களை ஆய்வு செய்யும் பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது.

மேலும் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கருதப்படும் தேர்வர்களை நேரில் அழைத்து விசாரணை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வர்களின் தேர்வுத்தாள், விடைத்தாள் சரிபார்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details