சென்னை:மதுரை மருத்துவக்கல்லூரியில் புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு இப்போகிரேடிக் உறுதி மாெழிக்குப் பதிலாக மகரிஷி சரத் சப்த் என்னும் உறுதி மொழியை எடுக்க வைத்த மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று (மே.4) மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக ரத்னவேல் நீடிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இதனிடையே, மதுரை மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப்படிப்பில் முதலாம் ஆண்டு நடத்தப்படும் 'வெள்ளை அங்கி விழா' பிரச்னை மதுரை மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்டவுடன்,
மதுரை மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரம் ஒரு சிலர் உண்மை தெரியாமல் மற்ற மருத்துவக் கல்லூரிகளிலும் சரகர் உறுதிமொழியை படித்தார்கள் என்று தேவையின்றி சமூக வலைதளங்கள் மூலம் வாய்க்கு வந்தபடி கூறி வருவதாகத் தெரிகிறது. மேலும் ஒரு சிலர் தங்களுக்குப் பிடிக்காத முதல்வர்களை மாட்டிவிட அந்த மருத்துவக் கல்லூரியில் இந்த உறுதிமொழியை எடுத்தார்கள் என்று பரப்பி வருவதாகவும் சங்கத்திற்குப் புகார்கள் வருகின்றன.
இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போது அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேவையின்றி மற்றவர்களை மாட்டிவிடும்படி செயல்படுவதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. தவிர்க்கப் படவேண்டிய சில நிகழ்வுகள் நடந்துவிட்டன. அதனை அனைவரும் ஒற்றுமையுடன் சரி செய்யவேண்டும். எனவே அனைத்து அரசு மருத்துவர்களும் தங்கள் ஆதரவினை இந்த வேண்டுகோளுக்கு வழங்க வேண்டும்" என அதில் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: 'தவறுதலாக சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றுள்ளனர்' - மருத்துவக் கல்லூரி இயக்குநர் நாராயண பாபு