தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அலுவல் ரீதியான கடிதத்தை சர்ச்சை ஆக்குதல் சரி அல்ல...’ - தலைமைச் செயலர் இறையன்பு - அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல

அலுவல்ரீதியாக துறையின் செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரி அல்ல என, தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

By

Published : Oct 26, 2021, 4:59 PM IST

சென்னை:தலைமைச் செயலர் இறையன்பு இன்று (அக்.26) அனைத்து துறை செயலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், "ஒவ்வொரு துறையிலும் ஒன்றிய அரசு பங்களிப்புடன் நடைபெற்று வரும் திட்டங்கள் என்னென்ன, மாநில அரசு திட்டங்களின் தற்போதைய நிலை, திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளர்கள் விவரம், திட்டம் பயன் அடைந்ததா உள்ளிட்டவை குறித்து ஆளுநருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அனைத்து துறை செயலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கணிணி மூலம் திட்ட அறிக்கை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். ஆளுநரை சந்தித்து விளக்கமளிப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அலுவல்ரீதியாக துறையின் செயலர்களுக்கு இறையன்பு அனுப்பிய கடிதம், முன்னதாக விவாதப் பொருளாக மாறியது.

இதையடுத்து அவர் தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அலுவல்ரீதியாக துறையின் செயலர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன்.

தலைமைச் செயலர் இறையன்பு விளக்கம்

தமிழ்நாட்டுக்கு ஆளுநர் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அவர்களுக்கு அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத் திரட்டி வைத்துக் கொள்ளுமாறு அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அலுவல் ரீதியான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து இதுபோல் தகவல்களைத் திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானது தான்.

அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் - முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி

ABOUT THE AUTHOR

...view details