சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள், தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால், தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து இக்கோரிக்கை குறித்துப் பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மேலும், பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு மதிப்பூதியம் வழங்க ஆணையிட்டுள்ளார்.
இதையும் படிங்க:MK Stalin:அரசு அலுவலகங்களில் மக்களை அலைக்கழிக்காதீர்கள் - முதலமைச்சர் அட்வைஸ்!
மக்கள் நலப் பணிகளைச் சிறப்பிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் இந்த மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.