சென்னை: Plastic Ban: சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சோதனைகளைத் தீவிரப்படுத்த வார்டு வாரியாக குழு அமைக்கச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் சோதனையைத் தீவிரப்படுத்த மாவட்டம் வாரியாக குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையில் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால், பிளாஸ்டிக் தடையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டப் பிளாஸ்டிக் சோதனை:
இந்நிலையில் பிளாஸ்டிக் பைக்கு பதிலாக மஞ்சப்பையைப் பயன்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும் பிளாஸ்டிக் தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும்; அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் பிளாஸ்டிக் சோதனையைத் தீவிரப்படுத்த, வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.