தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகர் ஊரமைப்புத் துறைக்கு தனி அலுவலகம்! நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு! - housing department

சென்னை: நகர் ஊரமைப்புத் துறையின் மண்டல அலுவலகங்களை சீரமைக்கவும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி அலுவலகம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியாகியுள்ளது.

tamilnadu govt
தமிழ்நாடு அரசு

By

Published : Jan 8, 2020, 11:31 AM IST


வீட்டுவசதி துறை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட நகர் ஊரமைப்புத் துறையில் உள்ளூர் திட்ட குழுமம் மண்டல அலுவலர்கள் மறுசீரமைத்து இரண்டு கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி அலுவலகம் ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நாமக்கல், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், தேனி, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் சார்நிலை அலுவலகங்கள் இல்லை.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அலுவலகங்கள் ஏற்படுத்த அறிவிப்பு வெளியானது.

மேற்கண்ட 11 மாவட்டங்களுடன் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவை சேர்த்து மொத்தம் 15 மாவட்டங்களில் நகர் ஊரமைப்புத் துறையின் மண்டல சார்நிலை அலுவலகங்கள் ஏற்படுத்தவும், அங்கு உள்ள 798 பணியிடங்களை நிரப்பவும் ரூ.3.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்க: பொதுத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details