சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் படி, ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் அனுப்ப திட்டம் - TAMIL NADU
இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக, அடுத்த வாரத்தில் தூத்துக்குடியில் இருந்து நிவாரண பொருட்களை அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் சென்னையில் இருந்து இலங்கைக்கு முதற்கட்டமாக நிவாரண பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, அரிசி, பால் பவுடர், அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளிட்டவை இரண்டாம் கட்டமாக தூத்துக்குடியிலிருந்து அனுப்ப தமிழ்நாடு அரசு தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்த வாரத்தில் நிவாரண பொருட்கள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஒவைசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!