தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகூர் தர்கா சந்தனக்கூடு; 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு! - நாகூர்

Nagore Dargah Festival: நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு விழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Chief Minister M.K. Stalin issued the decree
அரசாணை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 1:36 PM IST

சென்னை:நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும் என்ற வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு அரசு வனத்துறையின் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை, தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.

நடப்பாண்டிற்கான நாகூர் தர்காவின் 467வது சந்தனக்கூடு திருவிழாவுக்கு, நாளை (டிச.14) இரவு கொடி ஏற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 23ஆம் தேதி சந்தனக்கூடு புறப்பாடு நடைபெற்று, 24ஆம் தேதி அதிகாலையில் புனிதமிகு சந்தனம் பூசப்பட உள்ளது. இதற்கு முன்னதாக தர்காவின் 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.13) தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு, 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை, நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப், தலைமை நிர்வாக அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் ஆலோசனைக் குழு தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் கெளதமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:சபரிமலை பக்தர்களுக்காக விநோத பிரார்த்தனை.. 300 அடி கிணற்றில் 2 மணி நேரம் யோகாசனம்!

ABOUT THE AUTHOR

...view details