சென்னை: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. குஜராத் முதலமைச்சராக பூபேந்தர் பாட்டீல் நாளை பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்திலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து அவர், குஜராத் செல்கிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் பா.ஜ.க. அழைப்பு விடுத்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிருப்தியிலிருந்ததாக கூறப்படுகிறது.