தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் - படகுகளை மீட்டுத்தர கோரிக்கை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 தமிழ் மீனவா்கள் சென்னை திரும்பியதையடுத்து படகுகளை மீட்டுத் தர கோரிக்கை வைத்துள்ளனர்.

Etv Bharatஇலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் படகுகளை மீட்டுத் தர கோரிக்கை
Etv Bharatஇலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் படகுகளை மீட்டுத் தர கோரிக்கை

By

Published : Dec 6, 2022, 3:59 PM IST

சென்னை:இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் இன்று (டிச.6) சென்னை வந்தனர். இதனையடுத்து இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள படகுகளை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தினேஷ் குமார், லட்சுமணன், டோமினிக், சிவக்குமார், தென்றல் குமார், அழகர், சஞ்சய் உள்பட 14 பேர் கடந்த மாதம் 16ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது விசைப்படகில் பழுது ஏற்பட்டு இருந்தது. அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, 14 மீனவர்களை கைது செய்தனா்.

படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் பேசினார்கள்.

இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் 10 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர், நாகை மீனவர் ஒருவர் என 14 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர் மீனவர்கள் 14 பேரும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். 14 மீனவா்களுக்கும் அவசர காலச் சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக மீனவர் தினேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்திய எல்லையில் மீன்பிடித்தபோது படகு பழுது அடைந்து நின்றது. அப்போது, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். எங்களை விடுவித்தாலும் படகுகளை வைத்துக் கொள்கிறார்கள்.

படகுகளை மீட்டு தந்தால் தான் மீனவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். வாழ்வாதாரத்தை இழந்து மீனவர்கள் மிகுந்த கஷ்டப்படுகின்றனர். இலங்கை அரசு மீனவர்களின் பெரும் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி வைத்து கொள்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத்தர வேண்டும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க:கனமழை எச்சரிக்கை: 'பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார்'

ABOUT THE AUTHOR

...view details