சென்னை: தலைமைச் செயலகம் நிதித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு அரசு மொத்தமாக 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான, 20 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருக்கிறது.
ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை; தமிழ்நாடு நிதித்துறை அறிவிப்பு - பங்குகள் விற்பனை தமிழ்நாடு நிதித்துறை அறிவிப்பு
2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழ்நாடு நிதித்துறை அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் இந்த மாதம் 7ஆம் தேதி அன்று நடத்தப்படும். மேலும் போட்டி ஏல கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாக, இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) 7ஆம் தேதி, அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டுமென, தமிழ்நாடு நிதித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேண்டுகோள்