இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழர் கலாச்சாரமும், தமிழ் மொழியும் இல்லாவிட்டால் இந்திய வரலாறு முழுமையடையாது என்றும் மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வல்லுர்கள் இடம்பெறாதது வியப்பளிக்கிறது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தமிழ்நாட்டிலிருக்கும் திராவிட நாகரீகம் என்பது பழமையான வாழ்க்கை நாகரீகங்களில் ஒன்று. தெற்கில் இருக்கும் இந்த சிறப்புமிக்க வரலாறு சமீப காலங்களில் கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மேற்கொண்டு அகழ்வாராய்ச்சிகள் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.