தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு! - Online counselling

பொறியியல் படிப்பில் சேருவதற்கு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று முதல் 26-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 22, 2023, 8:16 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரையில் விண்ணப்பம் பெறப்பட்டது. மேலும், மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 9-ஆம் தேதி வரையில் வாய்ப்பு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் மீது மாணவர்கள் குறைகளை ஜூன் 30-ஆம் தேதி வரையில் தெரிவித்தனர்.

தற்போது மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அதில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. கலந்தாய்வு சுற்றுக்கான விரிவான கால அட்டவணையினை www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 430 கல்லூரிகளில் உள்ள 2,14,960 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1,57,378. கலந்தாய்வின் மூலம் நிரப்பட உள்ளது. அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 11,804 இடங்களும் , தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3,143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வேலூர் திருவள்ளுவர் பல்கலை. மதிப்பெண் பட்டியலில் மீண்டும் குளறுபடி!

இந்த நிலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று(ஜூலை 22) முதல் 26-ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்,மாற்றுத் திறனாளி பிரிவினர் கலந்தாய்வு நடைபெறும். www. tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு பிரிவில் 226 வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 9 பேர், மாற்றுத்திறனாளிகள் 26 தகுதிச் பெற்றுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 38 விளையாட்டு வீரர்கள், 11 முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், 579 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தகுதிப் பெற்றுள்ளனர் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'மின் இணைப்புகளில் பெயர் மாற்ற சிறப்பு முகாம்'; மின்சார வாரியம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details