தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் முடிவுகள்: பின்னடைவை சந்தித்துவரும் நட்சத்திர வேட்பாளர்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நிலையில், பின்னடைவை சந்தித்துவரும் நட்சத்திர வேட்பாளர்கள் விவரம்...

பின்னடைவை சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்
பின்னடைவை சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்

By

Published : May 2, 2021, 10:47 AM IST

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெற்றி வாய்ப்பை பெறுவார்கள் என எதிர்ப்பார்த்த நட்சத்திர வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

பின்னடைவை சந்திக்கும் வேட்பாளர்கள்

  • தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போட்டியிட்ட தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த நிலையில், தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • வேலூர் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் குஷ்பு குறைந்த வாக்குகளைப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • சென்னை திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை பின்னடைவில் உள்ளார்.
  • கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • விருத்தாசலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ். மணியன் ஆகியோர் பின்னடைவை சந்தித்திருக்கின்றனர்

ABOUT THE AUTHOR

...view details