தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 217.35 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் - சத்யபிரத சாகு - Satyaprada Sagu

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 217.35 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Satyaprada Sagu
சத்யபிரதா சாகு

By

Published : Mar 20, 2021, 7:55 PM IST

தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 217.35 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறாகச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 217.35 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பறக்கும் படை பறிமுதல்செய்த பொருள்கள் எண்ணிக்கை

அதாவது, ரொக்கமாக 80.88 கோடி ரூபாயும், மதுபானங்கள் 1,18,524.37 லிட்டர் இதன் மதிப்பு 1.61 கோடி லட்சமும், தங்கம் 404 கிலோ கிராம் இதன் மதிப்பு 117 கோடியும், வெள்ளி 299 கிலோ கிராம் இதன் மதிப்பு 1.65 கோடி ரூபாய் ஆக மொத்தமாக 217.35 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’ஸ்டாலின்தான் வராரு... மக்களெல்லாம் உஷாரு’: பாட்டாகவே பாடிய விந்தியா

ABOUT THE AUTHOR

...view details