தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி... அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை! - தலைமை தேர்தல் அதிகாரி

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகிறார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 10:10 AM IST

Updated : Oct 25, 2023, 12:41 PM IST

சென்னை:வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (அக். 25) ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டமானது சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்சிகளின் சார்பாக நாடாளுமன்ற தேர்தலுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே, அக்டோபர் 27ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னதாக அரசியல் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்காக, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிபிஎம் சார்பில் டாக்டர். ரவீந்திரநாத், தே.மு.தி.க சார்பில் துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக நவாஸ் சந்திரமோகன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஸ்டெல்லா மேரி பாரூக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உள்ளனர்.

தேர்தலுக்கான, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 5 மாநில தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் இருந்து 40 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சதுரங் வேட்டை பாணியில் நடந்த இரிடியம் மோசடி... ரூ.6 ஆயிரம் கோடி தேவை என கோடிக்கணக்கில் மோசடி! கைவரிசை கும்பலிடமே கைவரிசை காட்டிய நீதிபதி!

Last Updated : Oct 25, 2023, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details