தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அலுவலர்கள் நாளை ஆலோசனை - Bihar State Election Officer

சென்னை: தமிழ்நாடு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பிகார் மாநில தேர்தல் அலுவலர் ஹெச்.ஆர்.சீனிவாசா சென்னை வந்தடைந்தார்.

சென்னை
சென்னை

By

Published : Dec 20, 2020, 9:25 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்வது குறித்து இந்திய தலைமை தோ்தல் ஆணையம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவினா் நாளை (டிசம்பர் 21) மற்றும் நாளை மறுநாள் (22ஆம் தேதி) சென்னையில் தமிழ்நாடு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனா்.

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பிகார் மாநில தலைமைத் தோ்தல் அலுவலர் ஹெச்.ஆர்.சீனிவாசா பெங்களூருவில் இருந்து இன்று (டிசம்பர் 20) சென்னை வந்தடைந்தார். அவரை அலுவலர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

சென்னை வந்தடைந்த பிகார் மாநில தேர்தல் அலுவலர்
தேர்தல் ஆணைய குழுத் தலைவரும், இந்தியத் தலைமை தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா் உமேஷ் சின்ஹா, துணை தோ்தல் ஆணையா் ஆஷிஷ் குந்த்ரா, தலைமைத் தோ்தல் ஆணைய இயக்குநா் பங்கஜ் ஶ்ரீவச்சவா, தலைமைத் தோ்தல் ஆணைய செயலாளா் மாலே மாலிக் ஆகியோா் நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வருகின்றனா். தேர்தல் ஆணைய துணை ஆணையா் சுதீப் ஜெயினும் டெல்லியில் இருந்து நாளை பகல் 12 மணிக்கு சென்னை வர உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details