தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 5, 2023, 6:13 PM IST

Updated : Jul 5, 2023, 6:31 PM IST

ETV Bharat / state

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா - பங்கேற்கிறார் ஆளுநர்

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா ஜூலை 7ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை ஏற்று பட்டமளிக்க உள்ளார்.

tamil-nadu-dr-j-jayalalithaa-fisheries-university-convocation-governer-rn-ravi-participated
ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா:ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பு.

சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா வரும் ஜுலை 7ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ''தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா வரும் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை - சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு ஆளுநரும், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை ஏற்று பட்டமளிக்க உள்ளார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை, தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரை வழங்க உள்ளார்.

மேலும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக இணைவேந்தருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கிறார். இவ்விழாவில் 3 பிரிவுகளில் 313 மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டம், 51 முதுகலைப்பட்டம் மற்றும் 22 முனைவர் பட்டமும் வழங்கப்படஉள்ளது. மேலும் முதல் மதிப்பெண்கள் பெற்ற 15 மாணவர்களுக்கு விருதுகளுடன் கூடிய பதக்கங்களும் வழங்கப்பட உள்ளது.

மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 386 மாணவர்கள் இளங்கலைப் பட்டம் பெறவுள்ளனர். இதில் நேரடியாக 297 மாணவர்களும், தபால் மூலமாக 16 மாணவர்களும் பட்டம் பெறவுள்ளனர். இதனையடுத்து முதுகலைப் பட்டம் பெற்ற மொத்தம் 56 மாணவர்களில் நேரடியாக 36 மாணவர்களும், தபால் மூலமாக 15 மாணவர்களும் பட்டம் பெறவுள்ளனர். மேலும் 19 மாணவர்கள் நேரடியாகவும் தபால் மூலமாக 3 மாணவர்களும் முனைவர் பட்டம் பெறவுள்ளனர்.

இவ்விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் வரவேற்புரை வழங்கி பல்கலைக்கழக ஆண்டறிக்கையை வழங்கவுள்ளார்கள். பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் என்.பெலிக்ஸ், தேர்வு கட்டுப்பட்டாளர் ராஜ்குமார், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக் கழகங்களில் படித்த மாணவர்களுக்கு பட்டபடிப்பு முடித்ததற்கான சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆளுநர் அனுமதி கொடுக்காததால் தான் பட்டபடிப்பு வழங்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே வழங்கப்பட்ட நாட்களில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிக்க அனுமதியுங்கள் - அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம்

Last Updated : Jul 5, 2023, 6:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details