தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஜூன் 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்! - சென்னை செய்திகள்

8-ஆம் வகுப்பு தனித் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுதேர்விற்கு ஜூன் 20-ஆ தேதி முதல் 28-ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Jun 18, 2023, 10:19 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் பள்ளிகளில் இடை நின்ற மானவர்கள் பயன்பெறும் விதமாக 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை நேரடியாக எழுதுவதற்கு ஜூன் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது 8-ஆம் வகுப்பு எழுதும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் நேரடியாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினையும் எழுத முடியும்.

மேலும் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுதித் தகுதிபெறும் மாணவர்கள் அரசின் வேலைக்குச் செல்வதற்குத் தகுதி பெறுகின்றனர். இதனால் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர், நேரடியாகத் தனித்தேர்வர்களாகத் தேர்வு எழுதி தகுதி பெறலாம்.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆகஸ்ட் 2023-ல் நடைபெறவுள்ள தேர்வுகளுக்கு ஜூன் 20 ந் தேதி முதல் 28 ந் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கு தேர்வுக் கட்டணமாக ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.70 என மொத்தம் 195ருபாயை , சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தவேண்டும்.மேலும் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஜூன் 30, ஜூலை 1 ஆகிய நாட்களில், தேர்வுக்கட்டணத்துடன் தட்கல் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 கூடுதலாகச் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் , பள்ளிப்பதிவுத்தாள் , பிறப்புச் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் மட்டும் இணைத்துச் சமர்ப்பிக்கலாம் .ஏற்கனவே 8ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தோல்வியடைந்த மானவர்கள் தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாது ரூ.42-கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டு, பின்கோடுடன்கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் தபால்மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.மேலும் தேர்விற்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்களுக்குக் கால அட்டவணையின் படி காலை 10 மணி முதல் 12 மணி வரையில் தேர்வு நடைபெறும். ஆகஸ்ட் 7 ந் தேதி தமிழ், 8 ந் தேதி ஆங்கிலம், 9 ந் தேதி கணிதம், 10 ந் தேதி அறிவியல், 11 ந் தேதி சமூக அறிவியல் பாடத்திற்குத் தேர்வு நடைபெறும்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Father's Day: தந்தையை போற்றிய தமிழ் படங்கள் ஓர் பார்வை!

ABOUT THE AUTHOR

...view details